நேசமணி வசனத்தில் டிக்டாக் செய்து அசத்திய இயக்குநர் அட்லி... பிகில் படக்குழுவுடன் அட்ராசிட்டி!... வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிவரும் படம் பிகில். கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 200 திரையங்குகளில் வெளியான இந்தப்படம், 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிசையே அதிரவைத்து வருகிறது.

இதன்மூலம், மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து வரிசையாக ரூ.200 கோடி வசூல் செய்த ஹாட்ரிக் வெற்றிப் படங்களை அளித்த ஒரே நடிகர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். 

பிகிலின் இந்த வெற்றி சத்தம், பாலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படத்தைப் பார்த்த பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர், படத்தை புகழ்ந்து தள்ளியிருப்பதுடன் இயக்குநர் அட்லியை சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்றும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், பிகில் படக்குழுவுடன் இயக்குநர் அட்லி டிக்டாக் செய்து அசத்திய விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நேசமணி என்ற கேரக்டரில் வடிவேலு பேசிய வசனத்தை பேசி படக்குழுவினருடன் அவர் அட்ராசிட்டி செய்துள்ளார்.