இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அருவி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழ்' .

இந்த படத்தை, நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கேப் ஆட்ஸ் நிறுவனம் தயாரிப்புத்துள்ளது. பிரதீப் அந்தோனி ஹீரோவாக நடித்துள்ளார். பானு,  நித்யா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள 'வாழ்' படத்தின் டீசர், இந்த படமும் இதுவரை திரையுலகில் வெளிவராத கதை என்பதை நிரூபிக்கும் விதத்தில் உள்ளது. 

டீசரின் முதல் காட்சியிலேயே பைக் ரேசிங்,  எழில் கொஞ்சும் அருவியின் காட்சிகள், EEE  படித்துவிட்டு மார்க்கெட்டிங் வேலை செய்வது என ஹீரோவோ பேசுவது என ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாதது போலவே துவங்குகிறது டீஸர்.  

பிரகாஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹீரோவை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம் என்றும், எதிர்ப்பவர்கள் இன்னொரு புறம் என்றும் நீயா நானா கோபிநாத் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. படத்தின் நாயகி திருமணக்கோலத்தில் அறிமுகமாகிறார். பின் மாடல் உடையில் அவர் வலம் வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.  மேலும் விறுவிறுப்பான கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை தூண்டுகிறது.

இந்த படத்தின் ஒரு நிமிட டீசர் இதோ: