தொடர்ந்து தன்னுடைய  பக்கத்தின் மூலம் நேரடியாகவே பாஜக கட்சி குறித்தும்,  மோடி அரசின் கொள்கைகள் குறித்தும் விமர்சித்து வருபவர் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப். 

இவர் கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்'  படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.  மேலும் பல பாலிவுட் படங்களை இயக்கியுள்ளார்.  

இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டர் பக்கத்தை  விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சி ட்விட் ஒன்றை பதிவிட்டு அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த நாட்டில் ஒரு கருத்தை அச்சமின்றி பேச முடியவில்லை என்றும், இந்த புதிய இந்தியா குண்டர்கள் ராஜ்யமாக மாறி விட்டதாக தெரிவித்துள்ளார்.

 இங்கு பகுத்தறிவுவாதம் என்பதற்கு இடமில்லை என்றும்,  இந்தியா செழிப்படைய வாழ்த்துக்கள் என கூறி  ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறியுள்ளார்.  மேலும் இப்படி கருத்தை தெரிவிப்பதால்  தொடர்ந்து தன்னுடைய மகளுக்கு சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் வருவதாகவும் கூறியுள்ளார் அனுராக்  காஷ்யாப் என்பது குறிப்பிடத்தக்கது.