Asianet News TamilAsianet News Tamil

பேச்சு வாழ்த்தி தோல்வி அடைந்தால்.. சொகுசு பேருந்துகள் எவ்வாறெல்லாம் மக்களை வாட்டி வதைப்பார்கள்! தங்கர் பச்சான்

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான்... பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாட நினைக்கும் மக்கள் பற்றி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

director and cinematographer thankar bachan emotional statement mma
Author
First Published Jan 8, 2024, 8:38 PM IST

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது , "நகரங்களுக்கும்,பெருநகரங்களுக்கும்,பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பொருளாதாரம் தேடி வாழ்வை தேடிக்கொண்ட என்னைப் போன்றவர்கள் ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் பிறந்த மண்ணில் உறவினர்களுடன் கொண்டாடுவதையே விரும்புகின்றனர். 

இவ்வாறான நாட்களில் பொதுப் பேருந்தில் இடம் பிடித்து நின்று கொண்டே பயணம் செய்து ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பிய நாட்களை என்னால் மறக்க இயலாது! சொந்த ஊர்திகளில் குடும்பத்தினருடன் பிறந்த ஊர் சென்று திரும்பும் வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை! 

director and cinematographer thankar bachan emotional statement mma

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத  நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அரசின் நிதி நிலை அறிந்து உடனே தொழிற்சங்கங்களும் இணக்கமான முடிவை எட்டுவதற்கு முன் வர வேண்டும்.

ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஏற்கனவே கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சொகுசு பேருந்துகள் எவ்வாறெல்லாம் மக்களை வாட்டி வதைப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை! சொந்த ஊரில் பண்டிகை நாட்களைக் கொண்டாட மக்கள் என்றைக்கு மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொள்கின்றார்களோ அன்றைக்குத்தான் உண்மையான கொண்டாட்ட நாட்கள்!! என தெரிவித்துள்ளார் இவரது இந்த பதிவுக்கு பலர் லைக்குகளை குவித்து வருகிறார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios