இந்தியாவில் பிறந்ததை அவமானமாக நினைக்கிறேன்.... இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து....!!!
இந்த போராட்டத்தை கண்ட சமூக அக்கரை கொண்ட திரைத்துரையை சேர்ந்த பலரும் களத்தில் தங்களது வீர விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அது மட்டும் இன்றி ஊடகம், சமூக வலைதளங்கள் என ஜல்லிக்கட்டு செய்தியே எங்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் அமீர் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் சொன்ன கருத்துக்களை எதிர்த்து வாதிட்டார்.
அவர் சொல்லும் போது சுப்பிரமணிய சுவாமி, பொன் ராதாகிருஷ்னன், தமிழிசை ஆகியோர் சொல்லும் கருத்துகள் மக்களை அச்சுருத்தும் விதமாக உள்ளது என்றும் .
ஸ்பெயின் நாட்டில் அவர்களுடைய பாரம்பரிய விளையாட்டான புல் பைட்டை தடுத்து நிருத்த முயன்றபோது அந்நாடு அது எங்கள் கலாச்சாரம் என பீட்டாவை தடுத்து நிறுத்தியது,
இதை ஏன் இந்திய நாடு செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு அந்நிய நிறுவனத்திற்கு பயப்படச்சொல்வது இந்திய நாட்டில் பிறந்ததை அவமானமாக கருதுகிறேன் என்றார்.
