இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். என்கிற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இவர் திருமணம் செய்து கொள்ள உள்ள மருத்துவர் ஐஸ்வர்யாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடித்த 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், இயக்குனர் ஏ.எல்.விஜய்.  இந்த படத்தை தொடர்ந்து, 'மதராசப்பட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'கரு' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

இவற்றில் சில படங்கள் வெற்றி பெற்றாலும், ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்கிற பெயரில், நடிகை கங்கனா ரணாவத்தை வைத்து இயக்கி வருகிறார். 

நடிகை அமலாபாலை விவாரது செய்த பின் திருமணமே வேண்டாம் என இருந்த இவரை, பெற்றோர் எப்படியோ திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டனர்.  ஜூலை மாதம் நடைபெற உள்ள தன்னுடைய திருமணம் குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தார் விஜய்.   இவர் திருமணம் செய்துகொள்ள உள்ள, மருத்துவர் ஐஸ்வர்யாவின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ: