Asianet News TamilAsianet News Tamil

வெர்ச்சுவல் ரியாலிட்டியில் படம் இயக்குகிறார் இசைப்புயல்; அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகும்…

Directed by a movie star in a virtual reality The next two films will be released ...
directed by-a-movie-star-in-a-virtual-reality-the-next
Author
First Published May 11, 2017, 11:58 AM IST


ரோஜா படத்தின் மூலம் இசை உலகிற்கு புதிய டிரெண்டை அறிமுகப்படுத்தியவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

தற்போது தன்னுடைய இசையை அடுத்த லெவலுக்கு கொண்டுபோகிறார், அது என்ன அடுத்த லெவல்? என்று கேட்கிறீர்களா?

ரோம் நகரில். “லெ மஸ்க்” என்ற படத்தை வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) தொழில்நுட்பத்தில் உருவாக்க்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அவரே இசையமைக்கிறார்.

இசையமைப்பாளராக சாதனை படைத்து ஆஸ்கர் விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட்டிலும் இசையமைத்தார். இப்போது இயக்குநராகவும் உருமாறியுள்ளார்.

இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தது:

“25 வருடங்களுக்கு முன்பு ‘ரோஜா’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானபோது எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்.

அப்போது மணிரத்னமும், என்னுடைய குடும்பத்தாரும் மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது பலருடைய ஆதரவும் எனக்கு இருக்கிறது.

இந்த படம் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இது ஒரு புதிய சோதனை முயற்சி.

இந்த வி.ஆர்.தொழில்நுட்பத்தை மக்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்பதில் தான் எனது எண்ணம் இருக்கிறது.

படம் பற்றிய கருத்துக்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

`பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படங்களை எடுக்க இங்கு பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். என்னிடம் 200 கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இன்னொரு படத்தையும் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குகிறார். இது ‘வி.ஆர்.மூவி பேஸ்’ என்ற புதிய முறையில் இந்திய நடனம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios