தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் 90களில் நடித்த நடிகைகளில் ஒருவர் சௌந்தர்யா. இவரை ஆர்.வி.உதயகுமார், நடிகர் கார்த்திர்க்குக்கு ஜோடியாக பொன்னுமணி படத்தில் அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே அவருடைய அழகாலும், நடிப்பாலும், ரசிகர்கள் மனதில் பச்சக் என படித்தவர். தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டவர். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், என இவர் நடித்த படங்களில் பட்டியல் நீண்டுகொண்டே போகும். 

பாஜக கட்சியில் இருந்த இவர், பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற போது, திடீரென விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய இறப்பு இன்றுவரை, ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ள ஒரு சம்பவமாகவே மாறி விட்டது.  

இந்நிலையில் இவரை பற்றி முதல் முறையாக யாருக்கும் தெரியாத ரகசியத்தை தன்னிடம் கூறிய ரகசியத்தை கூறியுள்ளார். இவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் உதயகுமார், தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இவர் மீது தீராத பாசம் வைத்துள்ள சௌந்தர்யா இவரை அண்ணன் என்று அழைத்து வந்துள்ளார்.

ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சௌந்தர்யா அண்ணா தான் தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். பின் தவிர்க்க முடியாத காரணத்தால் பிரச்சாரத்திற்கு செல்ல விபத்தில் உயிரிழந்தார். மேலும் இவருடைய இறுதி அஞ்சலிக்காக உதயகுமார் சென்றபோது சௌந்தர்யா புதிதாக கட்டிய வீட்டில் தன்னுடைய புகைப்படத்தை வைத்திருந்ததாகவும் கண் கலங்கியவாறு கூறியுள்ளார்.