Dileep forth bail cancelled
கொச்சி:
நடிகை பாலியல் தொந்தரவு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், நான்காவது முறையாக ஜாமீன் கோரி கெஞ்சியும், அங்கமாலி நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துள்ளது.
ஜூலை 10 ஆம் தேதி இந்த வழக்கில் கைதான திலீப், இரு முறை அங்கமாலி நீதிமன்றத்திலும், இரு முறை கேரள நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். நான்கு முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
திலீப் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த அங்கமாலி நீதிமன்றம், செப்.28 ஆம் தேதி வரை திலீப்புக்கு காவலை நீட்டித்தது. ஆலுவா கிளைச் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம், திலீப் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இதே வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன், கைதாவதில் இருந்து தப்பிக்க, முன் ஜாமீன் கோரி சனிக்கிழமை நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு செவ்வாய்க்கிழமை நாளை விசாரிக்கப்படவுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 1:11 AM IST