dileep and kavya can be arrested anytime
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம், படப்பிடிப்பை முடித்து கொண்டு காரில் சென்றபோது, மர்மநபர்களால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பல்சர் சுனில்உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் போலீசார், இந்த சம்பவத்துக்கு மூலக் காரணம் யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நேரத்தில் பல்சர் சுனிலின் கூட்டாளிகள், தனக்கு போன் செய்து, பணம் கேட்டு மிரட்டுவதாக மலையாள நடிகர் திலீப், போலீசில் புகார் செய்துள்ளார். இதனால், இந்த வழக்கு மேலும் சூடு பிடித்துள்ளது.
இதைதொடர்ந்து திலீப், அவரது மேனேஜர் அப்புண்ணி, டைரக்டர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே, நடிகர் திலீப், அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் குறித்து சில ஆதாரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவை அவர்களுக்கு எதிரானதாகவே உள்ளன.

பாவனாவை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது, மர்மநபர்பகள் தங்களது செல்போனில்வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சி, காவ்யா மாதவன் நடத்தும் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், போலீசார், காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவன் கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த வியாபார ஆவணங்களையும், வங்கி கணக்கு பரிமாற்ற விவரங்களையும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், போலீசாரின் விசாரணையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பல்சர் சுனில், பாவனாவை கடத்த திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய 4 தொலைபேசி எண்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதை ஆய்வு செய்தபோது, நடிகர் திலீப்பின் மேனேஜக்கு நெருக்கமானவர்கள் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையில், சிறையில்அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில், அங்கிருந்தபடியே, திலீப் மேலாளருடன் 3 முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதைதொடர்ந்து போலீசாரின் வலை திலீப் மீது விழுந்தது. அவரை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். இந்த வேளையில், நடிகர் திலீப் நடித்தபடப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படங்கள் தற்போது டிவி சேனல்களில் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்கள், கடந்த நவம்பர் மாதம், திருச்சூரில் உள்ள ஒரு கிளப்பில் நடந்த ‘ஜார்ஜ்சேட்டன் பூரம்’ என்ற படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை தெரியவந்துள்ளது.
அந்த படங்களில், திலீப்பும், பல்சர் சுனிலும் ஒன்றாக நிற்கவில்லை. இருப்பினும், அவர்களுக்குள் தொடர்பு இருப்பதை இந்த படங்கள் மூலம் வெளியாகியுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், திலீப் படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட வேறு புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், பேனி பாலகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர், பல்சர் சுனிலுக்கு ஜாமீன் பெற்றுத் தரக்கோரி, 2 பேர் தன்னை அணுகியதாகவும், பின்னர் ‘மேடத்திடம் பேசி விட்டு மீண்டும் வருகிறோம்’ என்று கூறி சென்றதாகவும் போலீசில் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறிய ‘மேடம்’ யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பதால் நடிகர் திலீப், அவரது மேனேஜர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா, காவ்யா மாதவன், அவரது தாய் ஆகியோரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பாவனா வழக்கில், தொடர்ந்து அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் வேளையில், போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், முக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.
இதற்காக, விசாரணை குழு தலைவரான கூடுதல் டி.ஜி.பி. தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்கு கண்காணிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
