Digital version of Aandavar kamal haasan s aalavandhan soon to hit screens
சமீபகாலமாக காலத்தால் அழிக்க முடியாத பல தமிழ் படங்கள் உள்ளது அந்த மாதிரியான படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி திரையிட்டு வருகிறார்கள் முதலில் சிவாஜி படங்கள் அடுத்து எம்.ஜி.ஆர் படங்கள் என்று செய்து வந்தனர் அந்த லிஸ்டில் ரஜினியின் பாட்ஷா படம் சமீபத்தில் வெளியானது அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் அப்பவே மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் 'ஆளவந்தான்' இந்த படத்தை மீண்டும் தூசு தட்டுகிறார் கலைப்புலி தாணு.
.jpg)
தாணு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் இரட்டை வேடங்களில் மிரட்டிய பிரமாண்ட படம் ‘ஆளவந்தான்’. ரவீணா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத் பாபு, கிட்டி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர்.
.jpg)
சிறுவனாக இருக்கும் போதே பெண்களை வெறுக்க ஆரம்பிக்கிறார் நந்து. சித்தி செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டு மன நல காப்பகத்தில் வளர்கிறார். நந்துவின் சகோதரர் விஜயகுமார் ராணுவத்தில் பணியாற்றுகிறார். விஜயகுமார் தன் மனைவியுடன் சிறையில் இருக்கும் நந்தகுமாரை சந்திக்கிறார். அதற்குப் பிறகு நந்து விஜயகுமாரின் காதலியைக் கொல்ல திட்டம் தீட்டுகிறார். சிறையிலிருந்து தப்பிக்கிறார். கொலை முயற்சியை விஜயகுமார் தடுக்க, இறுதியில் நந்து இறப்பதே 'ஆளவந்தான்' படத்தின் கதை.
.jpg)
நந்து, விஜயகுமார் என்ற இரட்டை கதாபாத்திரங்களில் கமல் ஆளுமை ரசிக்க வைத்தது. ''கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்'' என்று நந்து பாடியும் ஆடிய காட்சிகள் இன்னும் ரசிகர்கள் நினைவில் நிற்பவை.
.jpg)
டெக்னிக்கல், புதிய கதைக்களம், வித்தியாச முயற்சிகள் என்று கமல் பெரிய பாய்ச்சலை நிகழ்த்திய ‘ஆளவந்தான்’ படத்தை அப்போதைய ரசிகர்கள் ரசிக்கவில்லை. ‘ஆளவந்தான்’ 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருந்தால் பெரிதாக பேசப்பட்டிருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அதிநவீன டிஜிட்டல், ஒலி, ஒளி தொழில்நுட்பத்தில் ‘ஆளவந்தான்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாகிறது. தாணு 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
