‘ஜெண்டில்மேன்’ துவங்கி ‘2.0’ வரை 13 படங்களை இயக்கியுள்ள ஷங்கர் இதுவரை இளையராஜா இருக்கிற பக்கம் கூட திரும்பிப் பார்த்ததில்லை. அவரது ‘எஸ்’ பிக்‌ஷர்ஸ் தயாரித்த படங்களுக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை. 


‘2.0’ வுக்குப் பின்னர் இனிமேல் எப்போதும் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்ற உறுதியான முடிவு எடுத்ததாலோ என்னவோ தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜாதான் என்று முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

‘ஜெண்டில்மேன்’ துவங்கி ‘2.0’ வரை 13 படங்களை இயக்கியுள்ள ஷங்கர் இதுவரை இளையராஜா இருக்கிற பக்கம் கூட திரும்பிப் பார்த்ததில்லை. அவரது ‘எஸ்’ பிக்‌ஷர்ஸ் தயாரித்த படங்களுக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை. தாமிரா இயக்கத்தில் ‘எஸ்’ பிக்‌ஷர்ஸ் தயாரித்த ‘ரெட்டச்சுழி’ படத்துக்கு மட்டும் ராஜாவின் மூத்த பிள்ளை கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார்.

தற்போது கமலுடன் இணைந்திருக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர். ரகுமானை விட்டு ஷங்கர் நிரந்தரமாகப் பிரிகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமலின் மகள் ஷ்ருதி ‘உங்களுக்குப் பிடித்த பாடல் எது?’ என்று கேட்டபோது,’ ஒன்றல்ல இரண்டல்ல, எனக்கு எல்லா இளையராஜா பாடல்களையுமே பிடிக்கும்’ என்று மனம் திறந்து பதிலளித்தார் ஷங்கர்.