Did udhyanidhi copied from babubali?

‘பொதுவாக என் மனசு தங்கம்’ பட த்தில் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய திரவுபதி அம்மனின் சிலையை தலையில் தூக்கிக்கொண்டு நடப்பதாக ஒரு காட்சியை படமாக்கியுள்ளார்கள்!

’இரண்டாயிரம் துணை நடிகர்கள் நடிக்க ஐந்து நாட்கள் சிரமப்பட்டு படமாக்கினோம்’ என படக்குழுவினர் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தாலும், சிலரோ ‘இதெல்லாம் பாகுபலியை பார்த்து காப்பியடிச்சது மாதிரி இருக்காதா?’ என விமர்சனத்தை தூக்கிவீச அந்த சீனை அப்படியே தூக்கிவிட்டு வேறு சீன் ஷூட் செய்து சேர்க்கலாமா?’ என்றெல்லாம் யோசித்துக் குழம்பியதாம் படக்குழு!

உதயநிதியுடன் முதன்முறையாக பார்த்திபன் இணைவதால் காமெடி டிராக்கில் பார்த்திபனுக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் இதனால் சூரி அப்செட் எனவும் இன்னொரு பக்கம் நியூஸ் கசிய சூரியிடம் விசாரித்தால்,

‘அப்டிலாம் ஒண்ணுமில்லண்ணே. பார்த்திபன் சார் நடிக்கிற படத்துல நான் இருக்குறதே பெருமையாச்சே. யாராச்சும் சும்மா கொளுத்திப் போட்டு குளிர்காய்றதுக்கு என்னய பலிகடா ஆக்குறாங்ய்க. அவ்ளோதான்!” என்கிறார்!