ஐஸ்வர்யாராய் - அபிஷேக் விமான நிலையத்தில் சண்டையா..? வெளிவந்த பகீர் வீடியோ..!

உலக அழகி என்றாலே உடனே நம் மனதில் வந்து நிற்பது  ஐஸ்வர்யா ராய் தான். இவர் பாலிவுட் நடிகரும் அமிதாப்பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு, திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்குஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது

இதற்கு முன்னதாக, தனது மகள் ஆராதனாவை, அபிஷேக் பச்சனின் தாயுடன் பழக விட மாட்டார் என செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தான், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை  காண வெளிநாடு சென்று மும்பை திரும்பினர். அப்போது தனது  மகள் ஆராதனாவின் கையை பிடிக்க அபிஷேக் பச்சன் முயல்கிறார்.

அப்போது, ஐஸ்வர்யா ராய், அவருடைய கையை விலகி விடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அபிஷேக் பச்சன், செய்தியை வெளியிடும் போது, தவறாக வெளியிட கூடாது.

பொறுப்புணர்வுடன் நல்ல செய்தியை  உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்..தேவை இல்லாமல் கற்பனை செய்திகளை வெளியிட்டு வதந்தியை பரப்ப வேண்டாமே....என கேட்டுக் கொண்டு உள்ளார்.