தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் தான் நாக சைதன்யா, இவர் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி என்ற தமிழ் படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பிரபல நடிகர் நாக சைதன்யா தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை சமந்தா அவர்களை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் தான் சைதன்யா "பாய்ஸ் ஹாஸ்டல்" என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு திரையரங்கிற்கு சென்றுள்ளார். 

'டாடா' பட வெற்றிக்கு பின்னர் இளன் - யுவன் கூட்டணியில் கவின் இணையும் 'ஸ்டார்'! வெளியான செம்ம அப்டேட்!

அப்போது அங்கே குஷி படத்தின் டிரைலர் ஒளிபரப்பட்டது என்றும், அதை பார்த்த நாக சைதன்யா கடுப்பாகி பாதியிலேயே திரையரங்குகளில் இருந்து வெளியேறியதாகவும் சில தகவல்கள் வெளியானது. சமந்தா மீது இருக்கும் வெறுப்பின் காரணமாகவே சைதன்யா திரையரங்கில் இருந்து உடனடியாக வெளியேறினார் என்று பல செய்திகளும் பரவியது. 

ஆனால் தெலுங்கு ஊடகம் ஒன்று வெளியிட்ட அந்த செய்தி முற்றிலும் தவறு என்றும், தயவு செய்து அந்த செய்தியை மாற்றி அமைக்குமாறும் நாக சைதன்யா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அன்று முதல் அவர்கள் காதலித்து வந்த நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு அவர்கள் பிரிவதாக இருவரும் மனப்பூர்வமாக அறிவித்தனர்.

யாரு நம்ம சின்னத்திரை நாயகி ரோஜாவா..? குட்டை பாவாடை தாவணியில் டக்கர் போட்டோஷூட் - அழகு தான் போங்க!