dhuruva natchathiram movie prithiviraj acting villan character



மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் பிரித்திவி ராஜ். பரவலாக ஹீரோவாக நடித்தவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது இல்லை என்பது நிசப்தமான உண்மை.

ஆனால் பிரித்திவி ராஜ் சற்று வித்தியாசமானவர், காரணம் முன்னணி ஹீரோவாக நடித்த இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானதே வில்லனாகத்தான்.

இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் ஹீரோவாக இவர் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில், தற்போது விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான ஸ்டைலிஷ் வில்லனாக வருவார் பிரித்திவி ராஜ் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, விக்ரம் நடித்த ராவணன் படத்தில் பிரித்திவி ராஜ் நடித்தது குறிப்பிடத்தக்கது.