துருவ் நடித்த 'ஆதித்ய வர்மா' கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம்!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 15, Apr 2019, 7:23 PM IST
dhuruv athithya varma is doped?
Highlights

தெலுங்கில், நடிகர் விஜய் தேவாரகொண்டா நடித்து வசூல் குவித்த காதல் திரைப்படம் அர்ஜுன்ரெட்டி. இந்த படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில் கதாநாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார். 
 

தெலுங்கில், நடிகர் விஜய் தேவாரகொண்டா நடித்து வசூல் குவித்த காதல் திரைப்படம் அர்ஜுன்ரெட்டி. இந்த படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில் கதாநாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார். 

'வர்மா' என்கிற பெயரில் இயக்குனர் பாலா இயக்கி வந்த இப்படம், நினைத்தது போல் வரவில்லை என தயாரிப்பு நிறுவனம், இந்த படத்தை, திரும்பவும் புதிய இயக்குனரை வைத்து எடுக்க உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தது.

இந்நிலையில் மீண்டும் 'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் தயாராகி வருகிறது.  

மேலும் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் 'கபீர் சிங்' என்கிற பெயரில் இந்தியிலும் ரீ -மேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

ஆனால் இதுவரை 'ஆதித்ய வர்மா ' குறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதனால் இந்த படம் மீண்டும் கைவிடப்பட்டதாக கூறி ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதனை படக்குழு மறுத்துள்ளது. ஆதித்ய வர்மா கைவிடப்படவில்லை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடித்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்கள் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

loader