dhruv Vikram for debuting in Kollywood from the remake of Telugu blockbuster arjunreddy
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் கடந்த சில மாதங்களாகவே தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக கிடைத்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட் அடித்த 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாக உள்ளார்.
இந்த தகவலை சீயான் விக்ரம் உறுதி செய்துள்ளார். வேறு மொழி படமான அர்ஜுன்ரெட்டி படத்தில் துருவ் அறிமுகம் ஆவதால் அவரது அறிமுகப்படம் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்ப்பில் உள்ளார் சீயான் விக்ரம்.
மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
