ரியல் கிரிக்கெட் ஸ்டார் தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் (MSDhoni The Untold Story) எம். எஸ். தோனி தி அன் டோல் ஸ்டோரி . இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தற்போது படம் வெளியாகிய இரண்டு வார முடிவில் இந்த படம் இந்தியாவில் மட்டுமே ரூ 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் ஓவர்சீஸில் ரூ 30 கோடி என மொத்தம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 145 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த படம் எப்படியும் ரூ 160 கோடி வரை வசூல் செய்யும் மேலும் டிவி ரைட்ஸ், மியூஸிக் ரைட்ஸ் எல்லாம் சேர்த்து ரூ 200 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என தெரிகின்றது.

இதனால் தோனி ரசிகர் உற்சாகம் அடைத்துள்ளனர்.