இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் இந்த மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வந்தது. 

சிம்பு கடந்த ஆண்டு, தனி ஹீரோவாக நடித்து வெளியான 'AAA ' திரைப்படம் படுதோல்வியை தழுவியதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.  பலரும் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால், தமிழகத்தில் தற்போது வரை, அதாவது இரண்டு வாரங்களை கடந்தும் ரூ. 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல திரையரங்கங்குகளில் இருந்து ராஜாவை வெளியேற்றி விட்டனர் திரையரங்க உரிமையாளர்கள்.

ஆனால், கடந்த வாரம் சந்தானம் தயாரித்து நடித்து வெளியான 'தில்லுக்கு துட்டு-2 ' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவலில் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் ரூ 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், வெளிநாடுகளிலும் வசூல் சூப்பராக உள்ளது என திரைப்பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இதுவரை வெளியான சந்தானத்தின் திரைப்பயணத்தில், இந்த படம் தான் , அதிக வசூல் செய்துள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.  
பல திரையரங்குகளில் ராஜாவை வெளியேற்றி விட்டு தில்லுக்கு துட்டு 
2  காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.