பல வருடங்களாகவே தற்போது சினிமாவில் முன்னனி நடிகராக நடித்து வரும் தனுஷ் தங்களுடைய மகன் என கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்து வாதாடி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் தற்போது நல்ல நிலையில் இருக்கும் தனுஷ் தங்களுக்கு மாதம் 25,000 ஜீவனாம்சம் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் தனது தரப்பில் இருந்து ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனுஷின் அங்க அடையாளங்களை சரி பார்க்க வேண்டும் என மீண்டும் மதுரை தம்பதியினர் கூறியுள்ளதை ஏற்று பிப்ரவரி 28ம் தேதி தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.