ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் இடையே இருப்பது நல்ல நட்புதான் என அவர்கள் கூறிவந்தாலும், தர்ஷனும், ஷெரினும் காதலிப்பதாகவே அனைவராலும் பேசப்பட்டது. ஏன்? இருவரின் பெயரையும் இணைத்து Tharsherin, SherinAnni போன்ற பெயர்களில் சமூக வலைதளங்களில் அக்கெவுண்ட்கள் உருவாக்கப்பட்டு, இருவரின் புகைப்படங்களும் பகிரப்பட்டு வந்தன. 

இது, தர்ஷனின் காதலியும், நடிகையுமான ஷனம் ஷெட்டியை மனதளவில் வெகுவாக பாதித்தது. இதையடுத்து இனி நான் உன் வாழ்வில் இல்லை என்று கூறி வீடியோ வெளியிட்டார் தர்ஷனின் காதலியான நடிகை ஷனம் ஷெட்டி. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு மீண்டும் ராசியான தர்ஷனும், ஷனம் ஸெட்டியும், ஜோடியாக ஊர் சுற்றினர். 

அத்துடன், விருது நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாக சென்று வந்தனர்.  இந்நிலையில் ஷனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட்டுகள் அவருக்கும், தர்ஷனுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டது என்று சொல்வது போன்று உள்ளது.

அவர் ஷேர் செய்துள்ள ஒரு போஸ்ட்டில், "நான் அதிகம் கேட்கவில்லை, தவறான நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதை புரிந்து கொண்டேன். அளவே இல்லாமல் கொடுத்திருந்தால் வருத்தப்பட வேண்டாம். விலகிச் செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள். 

அது லாபமா, நஷ்டமா என்பதை காலம் சொல்லும்" என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு போஸ்ட்டில், கடினமான நேரங்களுக்காக நன்றி சொல்லுங்கள். அந்த நேரங்களில் தான் யார் அன்பு வைக்கிறார்கள், யார் அன்பு வைத்துள்ளதாக நீங்கள் கற்பனை செய்தீர்கள் என்பது தெளிவாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.

ஷனம் ஷெட்டியின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், என்னம்மா தர்ஷன் பிரிந்து சென்றுவிட்டாரா என்று அக்கறையுடன் கேட்டுள்ளனர். ஷனம் - தர்ஷன் காதல் முறிவுக்கு, ஷெரின்தான் காரணம் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.