பிக் பாஸ் சீசன் 3இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது கடைசியாக 5 லட்சத்தோடு வீட்டிலிருந்தே வெளியேறிய கைவினை அடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷனும் வெளியேற்றப்பட்டார். கடைசியாக இறுதி போட்டியில் லாஸ்லியா, சாண்டி, முகேன் மற்றும் ஷெரின் உள்ளே இருக்கிறார்கள். தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். 

இதில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியையும், பிக் பாஸ் மீது சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் தர்ஷனுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினை வைத்து "நட்புன்னா என்னனு தெரியுமா?" என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் "இந்தியன் 2 "வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் தர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

இதைப் பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று கூறுகின்றனர்.  இந்தியன் 2வில் ஏற்கனவே காஜல் அகர்வால்,  சித்தார்த், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், அணில் கபூர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருவதும் நிலையில் தர்ஷனும் இணைந்திருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.