இத்தனை நாள் பிக்பாஸ் வீட்டில், அதிகம் கேட்கப்படாத குரல் என்றால் அது லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோரின் குரல் என கூறலாம். ஆனால் இன்று வெளியான முதல் ப்ரோமோவிலேயே இத்தனை நாள் பூனை போல் இருந்த தர்ஷன் புலியாக மாறியது தெரிந்தது.

இத்தனை நாள், தான் குரலை உயர்த்தினாள், அனைவரும் அடங்கி விடுவார்கள் என்கிற கண்ணோட்டத்தில் அனைவரையும் மிரட்டி உருட்டி கொண்டு இருந்த வனிதாவின் குரலை அடக்கினார் தர்ஷன். இதனால் தற்போது வனிதாவின் ஒட்டு மொத்த கோபமும் தர்ஷன் மீது திரும்பியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில், வனிதாவிற்கு எதிராக தற்போது போட்டியாளர்கள் சிலர் திரும்பியுள்ளது காட்டப்படுகிறது. தர்ஷன் அவங்க குரலை உயர்த்தினா நான் அடங்கி போய் விடுவேன் என நினைக்கிறாங்க. இதை தான் எல்லோரிடமும் அவங்க செய்றாங்க என கூறுகிறார். உடனே மற்ற போட்டியாளர்களும் தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து ஷெரின், தர்ஷனுக்கு கோபம் வருதா, என கேட்டு தர்ஷனுடன் சிறிய வாக் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

வனிதா சற்றும் எதிர்பாராத மாற்றம் பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ளதால், அவருக்கு எதிராக சில போட்டியாளர்கள் திரும்பியுள்ளதால் ஆட்டம் காண்கிறது வனிதாவின் ஆட்டம் என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.