மும்பையில் நடந்துவரும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் நாயகி  நயன்தாரா, காமெடியன் யோகி பாபு ஆகியோருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜாலியாகக் கிரிக்கெட் ஆடிய புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பயில் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 23ம் தேதி முதல் நடிகை நயன்தாராவும் கலந்துகொண்டார். படப்பிடிப்புக் குழுவினரின் பலத்த கெடுபிடிகளையும் மீறி இம்முறை ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் அதிகமாக லீக் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று ரஜினி கிரிக்கெட் ஆடும் சுவாரசியமான ஸ்டில்கள் இன்று காலை முதலே வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த கிரிக்கெட் ஆட்டம் படத்தின் மாண்டேஜ் காட்சிகளுக்காக எடுக்கப்படுகிறதா அல்லது ரஜினி சொந்த டீம் அமைத்து ஆடினாரா என்று தெரியவில்லை. எதுவா இருந்தாலும் ரஜினி எத்தனை ரன் அடிச்சார்? நயன் எத்தனை ரன் அடிச்சார்ன்னு ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்க யாராவது ஸ்கோர் சொல்லுங்கப்பா...