தனது அரசியல் எண்ட்ரி குறித்து திட்டவட்டமான முடிவுகள் எடுக்கவேண்டியிருப்பதால்தான் ‘தர்பார்’ பட ஷூட்டிங்குக்கு 15 நாட்கள்
பிரேக் விடும்படி ரஜினி கேட்டுக்கொண்டதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில்; 35 நாட்கள் தொடர்ந்து நடந்து முடிந்த நிலையில்ரஜினி 3 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
அடுத்த ஓரிரு தினங்களிலேயே அவர் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று
வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது என்று தயாரிப்பு நிறுவனமான
லைகா அறிவித்துள்ளது.

இந்த 15 நாள் கேப் என்பது என்பது ரஜினியே கேட்டு வாங்கிக்கொண்டது என்றும் 23ம் தேதி தமிழக தேர்தல் முடிவுகள் வந்தவுடன்
தனது மன்ற நிர்வாகிகள், ஆலோசகர்கள், மற்றும் தன் கட்சியில் இணையக் காத்திருக்கும் கல்வித் தந்தைகள் ஆகியோருடன்
ஆலோசித்து ஒரு உறுதியான, இறுதியான முடிவை எடுக்க ரஜினி விரும்புகிறார் என்றும் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் அடுத்த நாள் தமிழகம் முழுக்க உள்ள முக்கிய நிர்வாகிகள் சென்னையில் இருக்கும்படி தகவல்
அனுப்பப்பட்டுள்ளதாம். 23ம் தேதி எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும் பட்சத்தில்தான் அடுத்த சில நாட்களிலே ரஜினி தனது
முடிவை அறிவிப்பாராம்.அவ்வாறு நிகழாமல் எடப்பாடி ஆட்சி இப்படியே தொடருமேயானால் ‘கண்ணா வரவேண்டிய நேரத்துல
கண்டிப்பா வருவேன்’ என்று பழைய பல்லவியைப் பாடி விட்டு படப்பிடிப்புக் கிளம்பிவிடுவாராம் ரஜினி.