சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர், டீசர், மற்றும் சும்மா கிழி சிங்கிள் பாடல் ஆகியவை ரசிகர்களால் வெறித்தனமாக ரசிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

அந்த வகையில், ரஜினி ரசிகர்கள் பலர் தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என,  சமூக வலைதளத்தின் மூலம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது விடை கிடைத்துள்ளது.

அதாவது, இன்று சரியாக 6 : 30 மணிக்கு தலைவரின் தர்பார் பட ட்ரைலர் வெளியாக உள்ளது. இதனை வரவேற்க ஒரு பக்கம் ரசிகர்கள் தயாராகும் நிலையில்... மற்றொரு புறம் இதனை ட்ரெண்டாக்கவும் தலைவரின் ரசிகர்கள் தயாராகி விட்டனர்.