'பேட்ட' படத்திற்குப் பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி காவல் அதிகாரியாக நடித்துள்ள 'தர்பார்' படத்திற்கு வெறித்தனமாக வெய்ட்டிங்கில் உள்ளனர் தலைவரின் ரசிகர்கள்.

மேலும் இந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவல் வந்தாலும், அதனை வைரல் ஆக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் இணைந்திருக்கும் இப்படம் பற்றிய தகவல் அவ்வப்போது வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது, 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா.

அதன் படி, டிசம்பர் 7ம் தேதி, அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி மணிக்கு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்க உள்ளது. ஏற்கனவே வெளியான, ‘சும்மா கிழி’ பாடல் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களுமே தெறிக்க விடும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.