'பேட்ட' படத்திற்குப் பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி காவல் அதிகாரியாக நடித்துள்ள 'தர்பார்' படத்திற்கு வெறித்தனமாக வெய்ட்டிங்கில் உள்ளனர் தலைவரின் ரசிகர்கள்.

மேலும் இந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவல் வந்தாலும், அதனை வைரல் ஆக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் இணைந்திருக்கும் இப்படம் பற்றிய தகவல் அவ்வப்போது வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ள, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ  தகவலை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 'தர்பார்' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே வெளியாகும் என்றும், அதில் முதல் பாடலாக 'சும்மா கிழி' என்ற பாடல் வரும் 27ம் தேதி வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ள 'சும்மா கிழி' என்கிற பாடலை சூப்பர்ஸ்டாரின் ஆஸ்தான பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ஏற்கனவே இவர் 'பேட்ட' படத்தில் சூப்பர் ஸ்டாருக்காக பாடிய மரண மாஸ் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 'சும்மா கிழி' பாடலிலும் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.