சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்தின் 'தர்பார்' படம் இன்று வெளியானதையொட்டி சென்னையில்  தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்த, 'தர்பார்' படம், இன்று  அதிகாலை 4 மணிக்கே வெளியானது.

இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், 'தர்பார் ' படம் வெளியாகிறது. பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியாகும், 'தர்பார்' படத்திற்கு, நான்கு நாள் சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி 9, 10, 13, 14ம் தேதிகளில், சிறப்பு காட்சிகள் திரையிட, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்டன்ர். ரஜினியின் சிறிய ரக கட் – அவுட்களுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேலும் தீபாராதணை காட்டியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,

சென்னை மட்டுமல்லாமல் மதுரை,  திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.