சமீபத்தில் தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனப் படங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வரவுள்ள ‘தனுசு ராசி நேயர்களே’வும் அந்த மாதிரிப்படம் தானா என்ற கேள்விக்கு இயக்குநர் பதிலளித்துள்ளார்.

பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி  இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி, யோகி பாபு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தனுசு ராசி நேயர்களே’.இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் பிரபல ஜோதிடர் ஒருவர், தனுசு ராசிக்காரர்கள், கன்னி ராசி பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று கூறுகிறார். இதற்காக நம்ம ஹீரோ கன்னி ராசி பெண்ணுக்காக தெருத்தெருவா தேடி அலைகிறார். ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து நீங்கள் என்ன கன்னி ராசியா? என்று கேட்கிறார். செவ்வாய் தோஷம், உனக்கு எனக்கு செட் ஆகாது என்றெல்லாம் ஹீரோ வசனம் பேச, வருகிறார் நம்ம ஹீரோயின். அவர் ஹீரோ ஹரிஸிடம்,’நீ சுவேதாவையும் ஒண்ணும் பண்ணல, அனிதாவையும் ஒண்ணும் பண்ணல என்று அவரது ஆசையை தூண்டி விடுகிறார். பின்னர் இருவரும் கட்டியணைத்து  லிப்லாக் கிஸ் கொடுத்து ரொமான்ஸ் செய்கின்றனர்.

மிகவும் கிளுகிளுப்பாக உள்ள இந்த ட்ரெயிலர் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே ‘சிந்து சமவெளி’,’பியார் பிரேமா காதல்’போன்ற பலான படங்களில் நடித்துள்ள ஹரிஸ் கல்யாண் ஒரு சரியான ரூட்டைப் புடிச்சிட்டாருய்யா’என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால் இது அப்படிப்பட்ட படம் அல்ல என்று மறுக்கும் இயக்குநர் சஞ்சய் பாரதி,’படத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது.ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கல்யாணம் செய்ய தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்ககூடிய படமாக இருக்கும்’என்கிறார். உங்க பேச்சு நம்புற மாதிரி இல்லையே பாஸு.