வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை திரைப்படம் நேற்று ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. ஏற்கனவே பிரபலமான வடசென்னையை கதைக்களமாக கொண்டு, யாரும் சொல்லாத கோணத்தில் யதார்த்தமாக இந்த படத்தை வெற்றிமாறன் கொடுத்திருக்கும் விதம் அனைத்துதரப்பினர் இடையேயும் நல்ல பாராட்டுக்களை பெற்றுத்தந்திருக்கிறது. 

வெட்டு குத்து என ரணகளமான சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை உடைத்து சொல்லி இருக்கும் இந்த திரைப்படத்தில் , அனைத்து கதாப்பாத்திரங்களுமே கச்சிதமாக அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பால் வட சென்னை படக்குழுவும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது. சர்ச்சைக்குரிய பீப் வசனங்களை எந்த இடத்திலும் பீப் போடாமல் சென்சார் அனுமதித்திருக்கிறது. 

 

ராஜீவ்  காந்தி கொலை சம்பவம், எம்ஜிஆர் மரணத்தின் போது நடந்த நிகழ்வுகள் என பல அரசியல் காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் வடசென்னை படம் கூடுதல் வரவேற்பை தான் பெற்றிருக்கிறது. பொதுவாகவே ஒரு படம் ரிலீசாகும் போது அதில் நடித்திருக்கும் நடிகர் அந்த படத்தினை ரசிகனோடு ரசிகனாக ரகசியமாக பார்த்து, மக்களின் ரியாக்ஷனை அறிந்து கொள்ள விரும்புவார்கள். 

தனுஷும் அதே பாணியில் வடசென்னை திரைப்படத்தினை திருநெல்வேலியில் உள்ள ராம் தியேட்டரில் வைத்து பார்த்திருக்கிறார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.