தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ், தற்போது வாத்தி படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத ஒன்று.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எனவே தனுஷ் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகானுடன் நடித்த அட்ரங்கி ரே படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதே போல் ஹாலிவுட்டில், 'தி கிரே மேன்' என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழில் இவர் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் உள்ளன.

இதுதவிர தெலுங்கிலும் வாத்தி என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் தனுஷ். இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.