மகன்களுக்காக எழுதிய தாலாட்டு பாடலை கச்சேரியில் பாடிய தனுஷ்! கேட்டதும் மெய்சிலிர்த்து போன இளையராஜா- வைரல் video
Rock with Raaja : சென்னையில் இளையராஜாவின் ராக் வித் ராஜா என்கிற இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், நடிகர் தனுஷும் கலந்துகொண்டார்.
தனுஷ் விவாகரத்து
நடிகர் தனுஷும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்து பிரியப்போவதாக திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர். பிள்ளைகளுக்காக அவர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
படங்களில் பிசியான தனுஷ்
இதையடுத்து நண்பர்களும், உறவினர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில், விவாகரத்து முடிவை தனுஷ் கைவிட்டாலும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். மனைவியை பிரியப்போவதாக அறிவித்தபின் எந்தவித நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வந்த தனுஷ், படங்களில் பிசியாக நடித்து வந்தார்.
இளையராஜா கச்சேரியில் தனுஷ்
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இளையராஜாவின் ராக் வித் ராஜா என்கிற இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். அவர் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா உடன் வந்து கலந்துகொண்டார். இதுகுறித்து புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
பாட்டு பாடிய தனுஷ்
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் பாட்டு பாடியும் அசத்தி உள்ளார். அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் படத்தில் இடம்பெறும் ‘நிலா அது வானத்து மேலே’ என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் பாடலை முதலில் தான் தாலாட்டு பாடலாக தான் மெட்டமைத்ததாகவும், பின்னர் தான் அதனை குத்துப் பாடலாக மாற்றியதாகவும் இளையராஜா கூறினார்.
மெய்சிலிர்த்து போன இளையராஜா
அப்போது மேடையில் இருந்த தனுஷ், தான் தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக எழுதிய தாலாட்டு பாடலை அதே டியூனில் பாடி அசத்தினார். தனுஷின் இந்த தாலாட்டு பாடலை கேட்ட இளையராஜா மெய்சிலிர்த்துப் போனார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Prashanth :அந்தகன் படத்துக்கு பின் அமிதாப்பச்சன் உடன் கூட்டணி அமைக்கும் பிரசாந்த்- இயக்கப்போவது யார் தெரியுமா?