*    பொன்னியின் செல்வம் நாவலை படமாக்கப்போகிறேன்! என்று மணிரத்னம் சொன்னபோது பல எதிர்மறை கருத்துக்களும் வந்து விழுந்தன. ஆனால் துணிந்து இறங்கினார் மணி. தங்கமீன்கள் ராம்! போன்ற ஆளுமைகள் தன்னோடு இருப்பதால் பெரும் தைரியத்தில் இருந்தார். ஆனால் திடீரென ராம் மம்மூட்டி மற்றும் மாதவனை இணைத்து புதுப் படம் ஒன்றில் கமிட்டாகி, நகர்ந்து கொண்டுவிட்டார். மணி இப்போ செம்ம கடுப்பில்!
(விடுங்க சார்! ஏன், எப்டி, சூர்யா, தேவாங்கிற மாதிரி நாலஞ்சு வார்த்தையில டயலாக் எழுதுறதுக்கு ராமெல்லாம் வேணுமா?)

*    மம்மூட்டியும், மாதவனும் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சேர இயக்கப்படும் ஒரு படத்தில் இணைகிறார்களாம். செம்ம சப்ஜெக்டாம். இப்படத்தின் ஒன் லைன் கதை மம்மூட்டியின் மூலமாக நயன் தாராக்கு சொல்லப்பட, நான் அதுல நடிச்சே தீருவேன்! என்று தானாக வந்து கமிட் ஆகியிருக்கிறார் நயன். 
(மம்மூட்டி ஏட்டா அப்ப விக்னேஸ் சிவனுக்கும் சேர்த்து டிக்கெட் போட சொல்லி பறையுங்கோ)

*    நயன் தாரா பிஸியான ஷுட்டிங்கில் தொடந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனோ நயன் போகுமிடமெல்லாம் கூடவே பாதுகாப்புக்கு போய்க் கொண்டே இருக்கிறார். இதனால் விக்கியை நம்பி ஒக்காந்திருந்த அவரது இணை மற்றும் துணை இயக்குநர்களோ ‘இனி வேலைக்காவாது! இவரு இப்போதைக்கு வந்து படம் பண்ண மாட்டாரு’ என்று பொட்டியை கட்டிக் கொண்டு கெளம்ப துவங்கிவிட்டனர். சூர்யாவை வைத்து விக்கி பண்ணிய படத்துக்கு பிறகு அவர் இதுவரையில் வேறு ஒரு படமும் பண்ணலை. 
(தானா கெளம்பும் கூட்டம்)

*    ஜோதிகா தனது சீசன் 2 ரவுண்டில், கருத்தாழம் மிக்க படங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அம்மணி கையில் இப்போதைக்கு இப்படி எட்டு படங்கள் இருக்கிறதாம். இதில் மேட்டர் என்னவென்றால், ஜோதிகாவுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது! என்று யாரோ கொளுத்திப் போட, சிவகுமார் சங்கடத்தில் நெளிகிறாராம். 
(என்ன சூர்யாஆஆஆஆஆ...அரசியல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமாப்பாஆஆஆஆஆ)

*    கட்டாய வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு ஒரு நம்பிக்கையை தந்துள்ளார் அல்லவா இயக்குநர் வெற்றி மாறன். ஆனால் நாம் கூறியது போல் முதலில் காமெடி சூரியின் படத்தை முடித்துவிட்டு பிறகே சூர்யாவிடம் வருகிறேன் என்று வெற்றி முடிவெடுத்துள்ளார். இதை மாற்றுவதற்காக தலைகீழாக நிற்கிறது சூர்யா தரப்பு. இதற்காக வெற்றியின் நெருங்கிய நண்பரான நடிகர் தனுஷின் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். 
(தனுஷை போற்று)
-    விஷ்ணுப்ரியா