நடிகர் என்பதையும் தாண்டி, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ரசிகர்கள் நெஞ்சங்களிலும், திரையுலகிலும் தனி அங்கீகாரம் பதித்துள்ளார்.  

நடிகர் என்பதையும் தாண்டி, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ரசிகர்கள் நெஞ்சங்களிலும், திரையுலகிலும் தனி அங்கீகாரம் பதித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பா. பாண்டி படத்தில் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராகவும் நிரூபித்தார். இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தை இயக்க தனுஷ் தயாராகி வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தனுஷ் அடுத்ததாக பா.பாண்டி படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில், நடிகர் கவுண்டமணியை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது தனுஷின் ஆசையாம். ஆனால், கவுண்டமணி தனுஷின் பட வாய்ப்பை ஏற்பாரா? அவருடைய ஆசையை நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பா.பாண்டி படத்தில் முதல் பாகத்தில், ராஜ்கிரண், ரேவதி, திவ்யா தர்ஷினி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.