தனுஷ் நடிப்பதை நாலுபேர் புகழ்வதும் நாணிலமே  புகழ்வதும் எல்லாம் இப்போது மேட்டரே இல்லை. ஏனென்றால் தனுஷ் எந்தப்படத்தில் நடித்தாலும் அதில் தனித்த தடம் பதிப்பவர். 

எமோஷ்னல் ப்லிம் என்றாலும் கமர்சியல் ப்லிம் என்றாலும் தன் க்ரீன் ப்ரசன்ஸால் வேறுலெவலை காட்டி மிரள வைப்பார். தற்போது 'மாரி2' வாக வரும் வெள்ளிக்கிழமை வெள்ளித்திரையில் வர இருக்கிறார். 

இன்று நடைபெற்ற 'மாரி2' பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், "எனக்கு வடசென்னை போன்ற படங்களில் நடிப்பதை விட மாரி படத்தில் நடிப்பது தான் சிரமம்" என்றார். மேலும் அவர் யுவன் சங்கர் ராஜா பற்றிப் பேசும்போது, "யுவன் ஒருவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படத்தில் இசை அமைத்ததால் தான் அந்தப்படம் வெற்றி அடைந்தது. அந்தப்படங்கள் வெற்றி அடையா விட்டால் நாங்கள் தெருவில் தான் நின்றிருப்போம்" என்றார் உருக்கமாக.