"அசுரன்" படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, "கொடி" பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் "பட்டாஸ்". பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள அந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. "புதுப்பேட்டை" படத்திற்கு பிறகு தனுஷுடன் மீண்டும் சினேகா நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மற்றொரு கதாநாயகியாக மெஹ்ரின் பிர்ஜதா நடித்துள்ளார். 

விவேக்-மெர்வின் இசையில் சமீபத்தில் வெளியான "ச்சில் ப்ரோ" பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது. அதுமட்டுமின்றி புரோமோஷனுக்காக வெளியான "ச்சில் ப்ரோ"  டிக்-டாக் சேலஞ்சிலும் தனுஷ் ரசிகர்கள் வேற லெவலுக்கு பின்னியெடுத்து வருகின்றனர். "பட்டாஸ்" படத்திற்காக மாஸ் ஓப்பனிங்காக "ச்சில் ப்ரோ" பாடல் கருதப்படுகிறது. மேலும் கடந்த வாரம் தனுஷின் மற்றொரு லுக்கில் வெளியான "பட்டாஸ்" பட மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு "பட்டாஸ்" படத்தில் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள அந்த பாடல் ச்சில் ப்ரோ பாடலை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு தெறிக்கவிடும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.