நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று திருபுவனத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் கதிரேசன் மற்றும் அவரது மனைவி மீனா இது பற்றி கூறுகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த தங்களது மகன் கலையரசன் தான் இப்போது தனுஷ் என்கிற பெயரில் படங்களில் நடித்து வருகிறார் என்றும்.
மேலும் தனுஷ் தங்கள் மகன் என்று கூறுவதால் கஸ்தூரி ராஜா குடும்பத்தினர் தங்களை மிரட்டி வருவதாக கூறியுள்ளனர் .
அதே போல் தாங்கள் கடந்த மூன்று வருடமாக நீதி மன்றம் மூலமாக இதை தெரிவித்து வருவதாகவும் ஆனால் இதற்கு தொடர்ந்து, தனுஷும், கஸ்தூரி ராஜாவும் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறியுள்ளனர்.
தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடிகர் தனுஷ் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.
