Asianet News TamilAsianet News Tamil

இத்தனை கோடி சம்பளமா..! மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தனுஷின் படம்?

நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பட்ஜெட் குறித்த ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இதுகுறித்த எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
 

dhanush pan india movie salary details and budget information is trur?
Author
Chennai, First Published Jun 23, 2021, 1:26 PM IST

நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பட்ஜெட் குறித்த ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இதுகுறித்த எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு, பல பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கூட தனுஷின் இயல்பான நடிப்பையும், இயக்குனர் மாரி செல்வராஜின் தனித்துவமான இயக்கத்தையும் மனதார பாராட்டி இருந்தனர். இந்நிலையில், தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் நடித்து வரும் 'தி கிரே மேன்' படத்திற்காக கடந்த பிப்ரவரி மாதமே குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.

dhanush pan india movie salary details and budget information is trur?

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து விட்டாலும், தற்போது இவருடைய மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் தனுஷ் இந்தியா திரும்புவதில் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது. 

dhanush pan india movie salary details and budget information is trur?

இந்தியா வந்த கையோடு,  கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், மற்றும் 'அசுரன்' பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், பான்- இந்தியா படமாக உருவாக உள்ள படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது.

dhanush pan india movie salary details and budget information is trur?

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படம் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும், இந்த படத்திற்கு தனுஷுக்கு சம்பளமாக ரூபாய் 50 கோடி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios