நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில், 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம், ஒரு நடிகராக அறிமுகமானவர் தனுஷ். தற்போது நடிகர் என்பதையும் தாண்டி,  தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், என வெற்றியாளாக தன்னை நிரூபித்துள்ளார். 

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, இயக்கி, தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் 'ப.பாண்டி'.  இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங், டிடி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் வெளியாகி, 3 வருடங்கள் ஆகும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.