dhanush next shooting place erope
தல நடிக்கும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு, ஐரோப்பிய நாடுகளில் எடுக்க துவங்கியதில் இருந்து, கோலிவுட் முன்னணி நடிகர்களின் படம் அனைத்தும் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.
'விவேகம்' படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் நிறைவு பெரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது விஜயின் 61 வது படத்தின் படப்பிடிப்பு, ஐரோப்பிய நாடுகளின் இன்னொரு நாடான மாசிடோனியாவில் படமாக்கப்பட்டு வருகிறது.
விஜயை தொடர்ந்து, தற்போது ப.பாண்டி வெற்றியில் திளைத்திருக்கும் தனுஷ், தான் நடித்த மற்றொரு படமான வடசென்னை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நேற்று தான் முடித்தார்.
இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படமான," 'The Extraordinary Journey of the Fakir " என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக பெல்ஜியம் நாட்டின் பிரச்சல்ஸ் நகருக்கு செல்லவுள்ளார் என கூறப்படுகிறது.
பிரபல ஈரான் இயக்குனர் "மர்ஜானே சட்ராபி" இயக்கும் இந்த படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களான 'பெரெனிஸ் பெஜு', மற்றும் "பார்க்கஹாட் அப்டி" உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் 'பண்டிட் குவீன்' படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
