நடிகர் தனுஷ், அமலாபால், சுரபி, விவேக் போன்ற பலர் நடித்து இயக்குனர் வேல்ராஜ் இயக்கிய மிகப்பெரிய வெற்றி படம் 'வேலையில்லா பட்டதாரி'. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் தனுஷ் ரகுவரன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பிரபல வில்லன், குணசித்திர நடிகர் ரகுவரனின் நினைவாகவே இந்த பெயரில் நடித்திருந்ததாக பேட்டி ஒன்றில் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விரைவில் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். 

இந்த படத்திலும் அவர் ரகுவரன் என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே தங்களுடைய சமூக வலைத்தளத்தில் இதை உறுதி செய்துள்ளனர். 

'விஐபி 2' படத்திற்காக மீண்டும் ரகுவரன் கதாபாத்திரமாக மாறுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளதோடு ரகுவரன் கேரக்டரின் கண்ணாடியை கையில் பிடித்தவாறு நிற்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.