கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, பிரபல நடிகர் தற்போது... முழுமையாக கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவின் இரண்டாவது அலையால்...  ரன்பீர் கபூர், அமீர் கான், ஆலியா பட், மாதவன், அக்‌ஷய் குமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கௌரி கிஷன், அதர்வா, சமீரா ரெட்டி, உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு பின் குண்டமடைந்தனர்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள திரையுலகில் பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் டொவினோ தாமஸ், 2018ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் முரட்டு வில்லனாக நடித்திருந்தார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்த லூசிபர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்தார். 

பன்மொழியில் உருவாகி உள்ள மின்னல் முரளி படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது ஆச்சியை ஏற்படுத்தியது. இதனை,  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர் தன்னை தனிமை படுத்திகொண்டு, மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணமாகி விட்டதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி விட்டேன். அனைவரது அன்பிற்கும் மிக நன்றி. தற்போது நலமாக உள்ளேன், அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.