தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கோலிவுட் திரையுலகில் தன்னுடைய சினிமா பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தாலும், மெல்ல மெல்ல பாலிவுட், ஹாலிவுட் திரையுலகத்திலும் நடித்து விட்டார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கோலிவுட் திரையுலகில் தன்னுடைய சினிமா பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தாலும், மெல்ல மெல்ல பாலிவுட், ஹாலிவுட் திரையுலகத்திலும் நடித்து விட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு முழு காரணம் இவருடைய திறமை என்றே கூறலாம். அதே போல் கதாநாயகன் என்றால்... இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறையை உடைந்து, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னணி நடிகராகலாம் என நிரூபித்தவர்.

ஏற்கனவே, தேசிய விருது, பிலிம் பேர் விருது, தமிழ் நாடு ஸ்டேட் அவரது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள தனுஷ்... தற்போது சர்வதேச அளவில் விருதை பெற்றுள்ளார்.

இவர் ஹாலிவுட்டில் அறிமுகமான The Extraordinary Journey of Fakir திரைப்படம் Barcelona Sant-Jordi International திரைப்பட விழாவில் சிறந்த காமெடி படத்திற்கான ரசிகர்கள் விருதை வென்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.