dhanush movie actress sonam kapoor marriage
நடிகர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஜண்ணா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரபல நடிகர் அனில்கபூரில் மகள் சோனம்கபூர். இவர் கடந்த சில வருடங்களாகவே, பிரபல புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். 
இருவர் வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு பச்சை கொடி காட்டிய நிலையில், இவர்களுடை திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக, இவர்களின் நெருங்கிய உறவினரான நடிகை ஸ்ரீதேவி இறந்தார். இதனால் திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இவர்களுடைய திருமண ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சோனம்கபூருக்கும் அவருடைய காதலர் ஆனந்த் என்பவருக்கும், மே மாதம் 8ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடைய திருமண பத்திரிக்கையும் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
இவர்களுடைய திருமணம், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாகவும், இதில் பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலோனோர் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
