மீடூ ஹாஷ்டாக் பயன்படுத்தி, பிரபலங்கள் முதல் முகம் தெரியாத பெண்கள் வரை தொடர்ந்து பாலியல் குற்றங்கள் குறித்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்த புகாரில் பிரபலங்கள் பற்றும் விஐபிகள் பலர் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே மீடூ பயன்படுத்தி பலர் புகார்களை கூறி இருந்தாலும், பாடகி சின்மயி மூலம் வைரலாகியுள்ளது. 

இவரை தொடர்ந்து எழுத்தாளர் சந்தியா மேனன், பிரபல பாடலாசிரியர் வைரமுத்தின் மீது பகிரங்க பாலியல் குற்றச்சாட்டை கூறினார். கூறியது அவர் என்றாலும் அதன்பின் வைரமுத்து மீதான குற்றச்சாட்டு எல்லாம் வரிசையாக வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இவர்களை போல பல நடிகைகளும் தங்களது குற்றச்சாட்டுகளை இந்த #MeTooவில் கூறி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, தனுஷின் அநேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டை கூறியுள்ளார்.

அதில், அந்த பிரபல நடிகர் திரையுலகில் மிக பெரிய அந்தஸ்தில் உள்ள நடிகர் என்றும், இப்போது அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை என்றாலும் நடித்த நடிகர் ஒருவர் என்னை அத்துமீறி இறுக்கி அணைத்தார். இதனால் நான் அவரை பற்றி இயக்குனரிடம் புகார் அளித்தேன். அவர் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல்... அவரிடமே தன்னை மன்னிப்பு கெட்டவைத்தார் என தன்னுடைய மன வேதனைகளை அல்லி கொட்டியுள்ளார்.

தற்போது அவருடைய பெயரை நான் அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அந்த நடிகரின் பெயரின் அறிவிப்பேன். நான் யாரை சொல்கிறேன் என்பது சம்மந்தப்பட்ட நடிகருக்கு நன்றாக தெரியும் என கூறி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.