நடிகை சாராஅலிகான் தன்னுடைய கார் ஓட்டுனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான். கடந்த 2018 ஆம் ஆண்டு கேதர்நாத் என்கிற படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகளையும் பெற்றார்.

இதை தொடர்ந்து சிம்பா, லவ் ஆஜ் கால், போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். இந்த படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட் படங்களாகவும் அமைந்தது. மேலும் நடிகர் தனுஷ் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்க உள்ள படத்தில், சாரா அலிகான் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையின் போது இரண்டு ஹீரோக்களிடமும் ஒரே நேரத்தில் முத்தம் வாங்கி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மேலும் செய்திகள்: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்... தனது பிரியமானவருடன் அமர்ந்து பைக்கில் அச்சத்தல் போட்டோ ஷூட்...
 

இந்நிலையில், மும்பையில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில், இவருடைய கார் ஓட்டுனரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய குடும்பம் மற்றும் வீட்டில் பணிபுரியும் மற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அனைவர்க்கும் நெகடிவ் என வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா வார்டில் தனிமை படுத்தப்பட்டுள்ள அவருடைய ஓட்டுநர் விரைவில், உடல் நலம் தேறி வரவேண்டும் என்றும் சாரா அலிகான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.