பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான, சோனம் கபூர் பாரில் குடித்துவிட்டு, போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி வைரலாகி.

திரையுலக நட்சத்திரங்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது, வழக்கமான ஒன்று தான். அதிலும் பாலிவுட் பிரபலங்கள் என்றால் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது.

இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சோனம் கபூர்.  இவர் நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் இந்தியில் நடித்திருந்த  'ராஞ்சனா' படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார்.  

தமிழிலும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், சோனம் கபூர் தமிழ் திரையுலகிலும் பிரபலமாக அறியப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட  இவர்,  திருமணத்திற்கு பின்பும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 'தி சோயா பேக்டர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய நண்பர்களுடன் பார் ஒன்றில், குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து, ரசிகர்கள் சிலர் சோனம் கபூரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@thewildcity @boxoutfm 🚀 ••• 💃🏽🕺🏽 @sonamkapoor @nimishshift

A post shared by anand s ahuja (@anandahuja) on Apr 15, 2019 at 9:36am PDT