Asianet News TamilAsianet News Tamil

உலக வரலாற்றிலே ப்ளாப் ஆன படத்துக்கு பார்ட் 2 எடுத்தது இந்த கூட்டம் தான்... நல்லா செய் செய்னு செஞ்சிட்டாங்க...

உலக வரலாற்றிலே ப்ளாப் ஆன படத்துக்கு இரண்டாம் பாகம் எடுத்தது எழம்பன் கூட்டம் தான். சரி இதாச்சும் நல்லா இருக்கும்ன்னு பாத்தா மரண பங்கம், மாரி தன் ரசிகர்களை நல்லா வச்சி செய் செய்ன்னு செய்தார் என்பதின் பொருளே மாரி-2 என ரசிகர்கள் சொல்லி கேட்டது.

Dhanush Maari 2 film review
Author
Chennai, First Published Dec 21, 2018, 9:55 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மனம் திருந்தி வாழ நினைக்கும் தனுஷ்க்கும், அவனை பழிவாங்க துடிக்கும் வில்லன் டோவினோ இடையே நடக்கும் போராட்டம் தான் மாரி 2 படத்தின் கரு.  முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம்  பார்க்கலாம் மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒண்ணுமே இல்லை.

பிரபல ரவுடியான மாரியை (தனுஷ்) கொல்ல தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறது. 100முறை அதை முறியடித்துள்ளார் என்கிற சாதனையை கொண்டாடும் அளவுக்கு அது தொடர்கிறது. மாரி கேங்கில் கிருஷ்ணாவும் சேர்ந்து தான் வழிநடத்துகிறார். போதை பொருள் கடத்தல் மட்டும் கூடாது என்கிற விஷயத்தில் தனுஷ் உறுதியாக இருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க வில்லன் டோவினோ தாமஸ் மாரியை கொல்லவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்பி வருகிறார். இன்னொரு பக்கம் கலெக்டராக இருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார், சென்னையில் இருக்கும் மொத்த கேங்ஸ்டர்களையும் ஒழித்துக்கட்டுவேன் என தனுஷை எச்சரிக்கிறார்.

Dhanush Maari 2 film review

லவ் நம்ம கேரக்டருக்கு செட் ஆகாது என சுற்றிவரும் மாரியை சுற்றி சுற்றி ஒரு தலையாக காதலிக்கிறார் அராத்து ஆனந்தி (சாய் பல்லவி). கிருஷ்ணா போதை பொருளுக்கு அடிமையாகி மீண்டவர். அவரது தம்பி எதிர் கேங் டோவினோ தாமஸூடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து சாய் பல்லவியை போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துகிறார். அந்த பழியை மாரி மீதே போட்டு தனுஷ்-கிருஷ்ணா இருவரையும் பிரிக்கிறார்.

எந்த சப்போர்ட்டும் இல்லாத மாரியை தற்போது கொல்ல கிளம்புகிறார் வில்லன். அதில் சாய் பல்லவி சிக்க, மாரி அவரை தூக்கிக்கொண்டு தலைமறைவாகிறார். அதன்பின் மாரி மற்றும் சாய் பல்லவிக்கு என்ன ஆனது? திரும்பிவந்து வில்லனை அழித்தாரா என்பது தான் மிச்ச கதை.

தனுஷ் – மாரி முதல் பாகத்தை போலவே மொத்த படத்தையும் தோளில் தாங்கி நின்றுள்ளார். கிளைமாக்ஸ் சண்டைகாட்சியிலும் சரி நம்மை அசத்துகிறார். சாய் பல்லவி நடிப்பில் எல்லோரையும் ஓவர்டேக் செய்துவிட்டார் சாய் பல்லவி. அழுதுகொண்டே தனுஷிடம் காதலை சொல்லும் சீனில் அவர் நடிப்பு நம் கண்களையும் ஈரமாக்கும். ரவுடி பேபி பாடலில் தனுஷின் நடனத்தை விட ஒரு படி அதிகமாகவே கவர்கிறார் சாய் பல்லவி. இவர் போடும் தர லோக்கல் குத்து ஆட்டம் பிரமிக்க வைக்கிறது நடிப்பிலும் கொஞ்சம் மிரட்டுகிறார்.

Dhanush Maari 2 film review

வில்லன் டோவினோ தாமஸ் மலையாள இறக்குமதி. படம் முழுக்க நீளமாக வசனம் பேசிக்கொண்டே இருக்கிறார். தனுஷே கிளைமாக்ஸில் “உன்னை பார்த்தால் கூட பயமா இல்லை.. நீ பேசுற லெந்த்தான டயலாக் கேட்க தான் பயமா இருக்கு” என கூறும் அளவுக்கு அவரின் வசனங்கள் உள்ளன.

வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சில நிமிடங்கள் மட்டும் வரும் சிறிய ரோல் தான். தனுஷுக்கு ஜால்ரா ரோலில் ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத், பெரிதாக காமெடி ட்ராக் இல்லை என்றாலும், ரோலுக்கு தகுந்தபடி நடித்துள்ளனர்.

யுவனின் பின்னணி இசை சில இடங்களில் அதிகம் கவர்கிறது. மாரி 1ல் அனிருத் இசையை அவர் ஓவர்டேக் செய்தாரா என்றால் அது கேள்விக்குறிதான்.
 
மேலும் படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல லாஜிக் மீறல்கள். கிளைமாக்ஸ் பைட்டில் பறந்து பறந்து வில்லனை அடிக்கும்+அடிவாங்கும் தனுஷ் முகத்தில் இருக்கும் கண்ணாடி மட்டும் கழன்று விழவே இல்லை. அது எப்படி என இயக்குனர் பாலாஜி மோகனை தான் கேட்க வேண்டும். 

மொத்தத்துல தியேட்டர்காரன் கரண்ட்பில் கட்ட காசு வருமா என்பதே சந்தேகம் தான் அப்படின்னா பாருங்க.

Follow Us:
Download App:
  • android
  • ios